சட்ட விரோதமாக காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அன்வர்தீன், ஜோஜோ மற்றும் உசைன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த 297 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.