சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்..
முதல் தர போட்டியான சையத் முஷ்டாக் அலி 20 போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கு முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய்சங்கரை கேப்டனாக நியமித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்..
மேலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதித்யா கணேஷ் என்பவரை தேர்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.