Categories
உலக செய்திகள்

சைபீரியா: குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்… 15 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

சைபிரியாவில் குடியிருப்பு கட்டிடம் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய போர் விமானம் ஒன்று சைபிரியாவில் உள்ள இர்குட்ஸ் நகரத்தில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்தில் விமானத்திலிருந்து விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின் ரஷ்ய போர் விமானம் சந்தித்திருக்கும் 11 வது விபத்தாகும் இது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தான் ரஷ்யாவில் அஜோவ் துறைமுக நகரில் மற்றொரு போர் விமானம் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |