Categories
மாநில செய்திகள்

சைபர் கிரைம் குற்றங்கள்…. மக்களை பாதுகாக்க காவல்துறை போட்ட பலே திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்துவதற்கு தினமும் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சைபர் கிரைம் குறித்த முத்துவும் முப்பது திருடர்களும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை சென்னை மாநகர காவல் துறை கடந்த மாதம் வெளியிட்டது.

அந்த புத்தகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 30 குற்றச்செயல் வழிமுறைகள் குறித்த விளக்கங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த புத்தகம் பொதுமக்கள் மத்தியில் எளிதில் கிடைக்கும் விதமாக க்யூ ஆர் கோடு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் தங்களின் மொபைலில் ஸ்கேன் செய்து சைபர் குற்றங்களை படித்துக் கொள்ளலாம். அதேசமயம் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணம் மோசடி, காவல் அதிகாரிகள் போல் பேசி மிரட்டி பணத்தை பறித்தல் மற்றும் வங்கி கணக்கில் இருந்து பணம் தவறுதலாக உங்களுக்கு டெபிட் செய்யப்பட்டு விட்டது எனக்கூறி பண மோசடி செய்தல் என இந்த மூன்று யுக்திகளை பலரும் கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |