இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு சின்ன எரகலித்தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தர்க்காடு பகுதியிலுள்ள உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபாலன் வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயபாலன் பிரதான சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபாலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கு காரணமான பாபு என்பவர் மீது வழக்குப் பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.