பெட்ரோல் டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்துங்கள் என்று பாரதிய ஜனதா எம்பி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜனதா இருப்பவர் சித்தேஷ்வர். இவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி செய்தியாளர்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் சைக்கிளை பயன்படுத்தவேண்டும். சைக்கிளை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. சிக்கனமாகவும் இருக்கும்.
இதன் மூலம் உடல் வலிமை பெறுவதுடன் எந்த நோயும் வராது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்று குறைந்த உடன் பெட்ரோல் டீசல் விலை குறையும். அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.