நாகை ஆரிய நாட்டு தெரு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிமாறனின் மகன் ஹரிஹர மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த மாதம் 18ம் தேதி நாகையிலிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரம் தூத்துக்குடி கன்னியாகுமரி ஊட்டி கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்ட ஹரிஹர மாதவன் இன்று 27 நாட்களுக்குப் பின் நாகை வந்து சேர்ந்தார்.
இந்த நிலையில் நாகை வந்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் சமூக ஆர்வலர்கள் ஆரிய நாட்டு தெரு மீனவர் கிராம மக்கள் போன்ற உற்சாக வரவேற்பளித்துள்ளனர். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவருக்கு மாலை மாற்றும் சால்வை அணிவித்து அவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மலை, மேடு, பள்ளம் என 2200 கிலோமீட்டர் தூரம் பயணம் என்பது கடுமையாக இருந்தாலும் அந்த பயனம் தனக்கு புதுவித அனுபவத்தை தந்திருப்பதாகவும் வழிநெடுகிலும் தான் சந்தித்த மக்களிடம் குளோபல் வார்மிங் பற்றி எடுத்துரைத்ததாகவும் இதன் மூலம் மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை காக்க முன்வர வேண்டும் என கல்லூரி மாணவர் ஹரிஹர மாதவன் தெரிவித்துள்ளார்.