வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள முகில்தகம் வெள்ளாளகோட்டை பகுதியில் ஆரோக்கியம்(70) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோக்கியம் வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஆரோக்கியம் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் ஆரோக்கியம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் முதியவரை திருவாடனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தொண்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.