சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மூதாட்டியின் சகோதரர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்காக 66 வயது மூதாட்டி வயல் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலட்சுமியை வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்ற பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அந்த மூதாட்டி சத்தம் போட கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.