Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சேவை குறைபாடு” இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…… அதிரடி உத்தரவு….!!!

நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கன்னியாக்குளம் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 76 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வாங்கி தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த புது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றதாக மதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு செய்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம், கடன் வாங்கிய பணத்தை நிதி நிறுவனத்திற்கு செலுத்தி ஆவணங்களை திரும்பத் தர வேண்டும் என மதன் முறையிட்டுள்ளார். அந்த கோரிக்கையை இரு நிறுவனங்களும் நிறைவேற்றவில்லை. பின்னர் வழக்கறிஞர் மூலம் மதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மதன் குமரி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டியுள்ளனர். பின்னர் காப்பீடு செய்த தொகையை செலுத்தி நுகர்வோருக்கு உரிய ஆவணங்களை திரும்ப கொடுக்க வேண்டும் எனவும், நஷ்ட ஈடாக 10000 ரூபாய் பணம், செலவு தொகை 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |