அதிதி சங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்ற வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அதிதி தான் நடனமாடும் வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் விருமன் திரைப்படத்தில் தான் பாடிய மதுரவீரன் பாடலுக்கு நடனமாடியுள்ளார். சேலையை தூக்கி சொருகி அப்பாடலின் ட்ரேட் மார்க் ஸ்டெப்பை போட்டு கலக்கியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தீயாய் இருக்கு என்று பையர் எமோஜியையும் ஹார்ட்டின்களையும் பறக்க விட்டு வருகின்றார்கள்.
https://www.instagram.com/aditishankarofficial/?utm_source=ig_embed&ig_rid=79e60863-15d5-4fe8-a144-f3dbcd8a4b23