ரயிலில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் சோதனையின் போது கைது செய்தார்கள்.
தன்பாத் – ஆலப்புழா இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில் நிலையம் முதல் செயலும் ரயில் நிலையம் வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். அவ்வாறு சோதனை மேற்கொண்ட பொழுது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இருந்துள்ளார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்ததில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட மலையத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோஜி என்பது தெரியவந்தது. இது போலவே மற்றொரு பெட்டியில் சந்தேகம் படும்படி இருந்த ஒரு நபரிடம் விசாரணை செய்ததில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சத்யநாராயணன் பூட்டேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 இளைஞரையும் கைது செய்தார்கள்.