Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்தல்”… போலீஸார் வழக்குப் பதிவு…!!!

சேலம் வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் போலீசார் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ரயில் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் கொல்கத்தா சாலிமர் – நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சேலம் நோக்கி பொம்முடி-சேலம் இடையே வந்தபொழுது சேலம் சிறப்பு ரயில்வே பிரிவு போலீசார் எஸ் 6 பெட்டியில் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் கருப்பு கலரில் ஒரு பை இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. ஆனால் அதை யார் கடத்திச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

 

Categories

Tech |