தெற்கு ரயில்வேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டமாக சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முறைகேடான பயணத்தை தவிர்க்கும் விதமாக அவ்வபோது பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு சேலம் விருத்தாச்சலம் பிரிவுகளில் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ஆறு ரயில்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சேலம், ஈரோடு, கோவை, கரூர் போன்ற பகுதிகளில் இருந்து 29 டிக்கெட் பரிசோதகர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இவர்களுக்கு ரயில்வே போலீசாரும் உதவியாக இருந்தன. இதனை அடுத்து அனைத்து ரயில் பயணிகளிடமும் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் டிக்கெட் இல்லாத பயணிகள் உயர்வகுப்பில் மாறி பயணம் செய்தவர்கள் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜிகள் போன்றவை சோதனை செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் மீது அபராதம் போடப்பட்டது.
மொத்தம் 192 பயணிகளிடம் 5,53,120 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ரயில்களில் முறைகேடானாக பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதே போல் இதே சோதனைகள் வருகின்ற நாட்களில் தொடரும் அதனால் பயணிகள் அனைவரும் சரியான முறையில் டிக்கெட் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உரிய ரயில் பெட்டிகளில் மட்டும் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த பரிசோதனைகளால் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.