Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொசுவலையுடன் வந்தவர்கள்”…. தடுத்து நிறுத்திய போலீசார்…. பரபரப்பு….!!!!!

சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொசு வலையுடன் வந்தவர்களால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தார்கள். இதனிடையே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர் உடலில் கொசு வலை சுற்றியபடி மனு கொடுக்க வந்தார்கள். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கொசுவலைகளை நீக்கிவிட்டு மனு கொடுக்க செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.

இதன் பின்னர் அவர்கள் கொசுவலைகளை நீக்கிவிட்டு ஆட்சியர் கார்மேகத்திடம் மனு கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, சேலம் மாநகர் பகுதியில் சென்ற சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, சாக்கடை கால்வாயில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி உள்ளது. கொசு தொல்லைகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள். ஆகையால் கொசுக்களை ஒழிக்க கோரி கொசுவலைகளை சுற்றியபடி மனுக்கொடுக்க வந்தோம் என கூறினார்கள்.

Categories

Tech |