சேலம் அருகே தாமாக முன்வந்து கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு ஏழு நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து மீண்டும் பாதிப்பை கட்டுக்குப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தபடுமா? என்ற கேள்வி தொடர்ந்து மக்கள் மனதில் எழுந்து வர,
கொரோனாபரவல் அதிகரிப்பதை தடுக்க சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொதுமக்கள் தாமாக முன்வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல் படுத்திஉள்ளனர். கடைகள் அனைத்தையும் ஏழு நாட்களுக்கு அடைத்து ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாமாக முன்வந்து வாழப்பாடி கிராம மக்கள் செய்யக்கூடிய இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.