Categories
மாவட்ட செய்திகள்

சேற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி…. கால்வாயை சுத்தப்படுத்திய போது நேர்ந்த சோகம்….!!

சென்னையில் மகன்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கால்வாயை சுத்தப்படுத்திய தொழிலாளி சேற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வாசுகி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முத்து இவருடைய மனைவி பச்சையம்மால் இவர்களுக்கு பாலாஜி, சரவணன், சரண்ராஜ் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முத்துவின் வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் மழைக்காலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு தண்ணீர் தேங்குவதால் இந்த தண்ணீர் முத்துவின் வீட்டிற்குள் வரும் அபாயமும் இருந்து வந்துள்ளது.

இதனால் முத்து அடிக்கடி அந்த கால்வாயை சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து முத்து நேற்றுமுன்தினம் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுவதற்காக தனது மகன்களுடன் கால்வாயை சுத்தப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் உள்ள சேற்றில் சிக்கி முத்து நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவருடைய மகன்கள் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.

தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பால்நாக ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் இரவு நேரம் என்பதால் தேட முடியாமல் சென்றுவிட்டனர். பின்பு மறுநாள் காலையில் வந்து தொடர்ந்து தேடி முத்துவின் உடலை மீட்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |