Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து…. 2 மணி நேரம் போராட்டம்…. மலை கிராம மக்களின் செயல்….!!

சேற்றில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் ஆறுகளை கடந்து மலை கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலை கிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சேறும், கற்களுக்கும் இடையே பேருந்தின் டயர் சிக்கியதால் வாகனத்தை ஓட்டுனரால் இயக்க முடியவில்லை. இதனை பார்த்த மலை கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கற்களை சீர்படுத்தினர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Categories

Tech |