தான் சேமித்த பணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன் மதிய உணவுக்கு காய்கறிகள் வாங்கி கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்பித்தும் சத்துணவு வழங்கும் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் இந்த பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பள்ளிக்கு 2 முறை காய்கறி வாங்கி தலைமை ஆசிரியரான ஆனந்தகுமாரிடம் கொடுத்துள்ளார். சிறுவயதில் கோபிகிருஷ்ணாவின் இந்த செயலை கண்டு ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் வியந்துள்ளனர்.