சேமிப்பு கணக்குகளுக்கு SBI வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் தரக்கூடிய வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
எஸ்பிஐ வங்கி:
எஸ்பிஐ வங்கி சேமிப்புகணக்குகளுக்கு 2.70 % வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூபாய் 1 லட்சத்துக்கு அதிகமாக இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 2.70 % ஆகும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி:
ஏப்ரல் 6 2022 முதல் ஹெச்டிஎஃப்சி வங்கி சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை புதுப்பித்து இருக்கிறது. அத்துடன் 50 லட்சம் ரூபாய்க்குள் சேமிப்புக்கணக்கு இருப்புகளுக்கு 3.0 % வட்டிவிகிதத்தையும் வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி:
ஜூன் 4 2020 முதல் ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக்கணக்குகளுக்கான பயன் உள்ள வட்டி விகிதத்தை புதுப்பித்து இருக்கிறது. சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டிவிகிதம் 3.00 % ஆகும். ரூபாய் 50 லட்சம் மற்றும் மேலுள்ள இருப்புகளுக்கு 3.50 % வட்டி விகிதம் கிடைக்கும்.
ஆக்சிஸ் வங்கி:
ஆக்சிஸ் வங்கியில் தற்போது 3-3.5 % வரை வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது. சேமிப்புக்கணக்கின் வட்டி விகிதம் தினசரி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும். ரூபாய் 50 லட்சத்துக்கு கீழ் சேமிப்பு கணக்கு இருப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 3 % ஆகும். ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 800 கோடிக்கு இடையேயுள்ள இருப்புகளுக்கு வட்டி விகிதமானது 3.50 சதவீதம் ஆகும்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி:
ரூபாய் 10 லட்சத்திற்கு சேமிப்புக் கணக்கு இருப்புகளுக்கான வட்டிவிகிதம் 4 % ஆகும். அதே நேரம் ரூபாய் 10 லட்சம் மற்றும் ரூபாய் 10 கோடிக்கு இடையேயான உறுப்புகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும்.

தபால் அலுவலகம்:
தனிநபர் (அல்லது) கூட்டுக்கணக்குகளுக்கு 2022 ஆம் வருடத்தின் 3ஆம் காலாண்டில் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகளின் தற்போதைய வட்டி விகிதம் வருடந்தோறும் 4.0 % ஆக இருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டின் முடிவிலும் நிர்ணயித்த வட்டிவிகிதத்தில் வட்டி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும்.