டி.என்.பி.எல். போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2வது வெற்றியை அடைந்தது. கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து குவித்தது. அதாவது கேப்டன் ஷாருக்கான் 28 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி , 5 சிக்சர் ), சுரேஷ்குமார் 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் தன்வர் 12 பந்தில் 28 ரன்னும் (2பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அதன்பின் சாய்கிஷோர் 2 விக்கெட்டும் , சித்தார்த், அலெக்சாண்டர், ஹரீஷ் குமார், சோனு யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து விளையாடிய சேப்பாக் சூப்பர்கில்லீஸ் அணியானது 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
அந்த வகையில் ஜெகதீசன் 51 பந்தில் 75 ரன்( 6 பவுண்டரி, 3 சிக்சர்) மற்றும் சாய்கிஷோர் 33 பந்தில் 48 ரன் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து குவித்தனர். பின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட் மற்றும் அஜித் ராம், பாலு சூர்யா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 2வது வெற்றி இது ஆகும். இதனிடையில் அந்த அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறது. இந்த வெற்றி தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக்காந்தி கூறியிருப்பதாவது “சிறப்பான பேட்டிங் வாயிலாக வெற்றி பெற்றுள்ளோம். எனினும் பல்வேறு துறைகளில் இன்னும் கவனம் செலுத்தி முன்னேற வேண்டி இருக்கிறது. இதில் ஜெகதீசன் எங்களது அணியின் தூணாக செயல்படுகிறார். எங்களின் பல்வேறு வெற்றிக்கு அவரது பங்களிப்பு இருந்துள்ளது” என்று அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து ஆட்டநாயகன் விருது பெற்ற சாய்கிஷோர் கூறியதாவது “இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சீசனில் என்னுடைய பேட்டிங் மேம்பட்டுள்ளது. என் பயிற்சியாளர் பிரசன்னாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இதற்கிடையில் கோவை கிங்ஸ் 3வது தோல்வியை தழுவியது. இந்த அணியின் கேப்டன் ஷாருக்கான் கூறியிருப்பதாவது “பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் போதுமான திறனை வெளிப்படுத்த தவறி விட்டோம். இந்த விளையாட்டில் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கி இருந்தால் நிலமை மாறியிருக்கலாம்” என்று கூறினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 5-வது போட்டியிடும் திண்டுக்கல் டிராகன்சை 16ஆம் தேதி எதிர்கொள்கிறது. கோவை அணியானது திருப்பூர் தமிழன்சை அதே தினத்தில் சந்திக்கிறது. இன்று நடைபெறும் 18வது லீக்ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் திருப்பூர் அணி 2வது வெற்றிக்காகவும், சேலம் அணி முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.