Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்ற இந்திய ஓபன் ‘பி’ அணி….!!!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்தியா 3-1 எனும் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கலபதக்கத்தை இந்தியா தட்டிச்சென்றது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அர்மீனியா அணியானது 19 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

Categories

Tech |