Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: 78 வயதிலும் சாதிக்கும் வீராங்கனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

செஸ்ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வயதான வீராங்கனை எனும் பெருமையை ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றிருக்கிறார். மொனக்கா நாட்டில் வசித்து வரும் அவருக்கு 78 வயதாகிறது. அர்ஜென்டினாவில் பிறந்து அந்த நாட்டு அணிக்கு விளையாடி பிறகு பிரான்ஸ் நாட்டுக்காக ஆடினார். இப்போது மொனாக்காவுக்காக ஆடுகிறார். நேற்றைய 4வது சுற்றில் அவர் 13 வயது சிறுமி மரியமை (துனிசியா) எதிர் கொண்டார்.

பின் 70-வது காய் நகர்த்தலுக்கு பிறகு ஜூலியா வெற்றியடைந்து இந்த வயதிலும் சாதித்தார். இதையடுத்து ஜூலியா கூறியதாவது “நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். எனினும் வெற்றிபெற்று விட்டேன். என் உடல்நலம் காரணமாக சில செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ளவில்லை. தற்போது இந்த போட்டியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார். இதனிடையில் ஜூலியா பங்கேற்கும் 18வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவாகும்.

Categories

Tech |