சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 180 க்கு மேற்பட்ட நாடுகளில் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் ஏற்கனவே இரண்டு ஆண்கள் அணி, இரண்டு மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி, முகேஷ், சசி கிரண் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 3 வது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கார்த்திகேயன், சேதுராமன், சூரிய சேகர் கங்குலி, அபிஜித், குப்தா, அபிமன்யு புரானிக் இடம் பெற்றுள்ளன. இவர்களில் கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார். இதன் மூலம் இந்திய சார்பில் மொத்தம் 25 வீரர்கள் செஸ் ஒலிம்பியாடில் போட்டியிடுகின்றனர்.