தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார்.
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள மாமரபுரத்தில் நடக்கிறது. இப்போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் உலக அளவில் 186 நாட்டைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலட்சினை மற்றும் சின்னத்தை ரிப்பன் வளாகத்தில் அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிபுணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மாநகரப் பேருந்துகள்,வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரபலகைகள் வைக்கப்பட்டது. இந்த போட்டி தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், கூடுதலாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து இன்று மாலை அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறார்.