உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்பாக கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி குறித்து பரவலாக விளம்பரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் அதிகாரப்பூர்வ சின்னமான தம்பி மற்றும் அதனுடைய சின்னமும் வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் “நம்ம சதுரங்கம் நம் பெருமை” என்ற விளம்பர வாசகங்கள் அடங்கிய பேருந்துகளை நகரம் முழுவதும் பயணிக்க கொடியசைத்து வைத்தார். வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 180 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக ஆக்குவதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் திறப்பு விழாவிற்கான டிக்கெட் வெல்வதற்கான வாய்ப்பு பெறுவதற்கு தம்பியுடன் செல்பி படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்ட சில போட்டிகளையும் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.