44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் மேல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர்கள் உள்ளிட பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் நான் பெருமை அடைகிறேன் என்று சர்வதேச கூட்டமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.