Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் அரங்கம் முழுவதும் 5 ஜி இன்டர்நெட் சேவை…… அரசு செம சூப்பர் நியூஸ்….!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கியுள்ளனர். மேலும் செஸ் ஒலிம்பிக் ஜோதியும் மாமல்லபுரம் வந்தடைந்தது. இதையடுத்து  செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் முழுவதும் அதிவேக 5 ஜி இன்டர்நெட் சேவை கொடுக்கப்பட இருப்பதுடன், வீரங்களுக்காக 2000 சிம்கார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |