பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து வந்த செவிலியர் ஒருவரை மருத்துவர்கள் வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு வயாகரா மருந்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிசயிக்கும் விதமாக குணம் அடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா என்ற செவிலியர் மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதியுற்று வந்தார். முன்னதாக அவர் 2 டோஸ் தடுப்பு ஊசி போட்டும் எந்த பயனும் இல்லை. இதனைத் தொடர்ந்து அவர் சில நாட்களில் தூண்டப்பட்ட கோமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து 28 நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் அவருக்கு வயாகரா மருந்தை கொடுத்தனர். இந்த மருந்தின் வீரியத்தால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் வேகமாக சுற்றத் தொடங்கியது. இதனால் அவர் கோமாவில் இருந்து மீண்டார். இந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.