பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான ஐந்து முக்கிய விதிமுறைகள் சில மாதங்களுக்கு முன் திருத்தப்பட்டன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
1.தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும். அதற்கு முன் 10 வயதை தாண்டிய பெண்களே கணக்கை பயன்படுத்தலாம்
2. முன்பு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். அல்லாவிட்டால் கணக்குக்கு வட்டி வராது. ஆனால் தற்போது 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
3. தற்போது, மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை மூடிக்கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும்.
4. முன்பு ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனினும், தற்போதைய விதிமுறைப்படி, முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.