சுகன்யா சம்ரிதியோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறுசேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில் வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தை பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு (அல்லது) பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் நீங்கள் கருதலாம். அண்மை காலமாக இத்திட்டத்தில் பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. அரசு சார்பாக இத்திட்டம் பற்றி விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது போஸ்ட் ஆபீஸ், பொதுத் துறை வங்கியின் வாயிலாக இந்த திட்டத்தில் இணையலாம். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்தில் வட்டி விகிதம் உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. ppf, nsc, ssy இத்திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ரெப்போ விகிதத்தை மீண்டுமாக 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கியானது முடிவெடுத்த பின், இந்தசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி ரெப்போ விகிதத்தை 1 மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 -0.75 % வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. வரும் 1 ஆம் தேதிமுதல் பொதுவருங்காலம் வைப்புநிதி, செல்வமகள்சேமிப்பு, NSC போன்ற திட்டங்களுக்கான வட்டி விகிதங்களானது அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2020-21 முதல் காலாண்டிலிருந்து சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. 2022-2023 நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான பல சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் துவங்கி ஜூன் 30, 2022-ல் நிறைவடையும். நடப்பு நிதிஆண்டின் 2-வது காலாண்டிற்கான இச்சேமிப்பு திட்டங்களின் வட்டிவிகிதங்களானது அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடும்வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்.