Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“செல்லாக்காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்கள்”… மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

செல்லாக் காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

சென்ற 2010 ஆம் வருடத்தில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. ஆனால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் செல்லாக்காசாகவே இருக்கின்றது. இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 2010ம் வருடம் 10 ரூபாய் நாணயம் வெளியாகி பின் தலைவர்களின் நினைவாக பல வடிவங்களில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. சில வருடங்களாகவே பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகின்றது.

இதனால் மக்களிடையே பத்து ரூபாய் நாணயம் வாங்குவதில் தயக்கம் ஏற்பட்டு தற்போது நாணயம் வாங்குவதே முடக்கப்பட்டிருக்கின்றது. ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என பலமுறை கூறினாலும் திருப்பூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயம் இன்று வரை செல்லாமலேயே இருக்கின்றது. இதனால் இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான வங்கிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Categories

Tech |