Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணி உயிரிழந்தால்…. 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை…. எங்கு தெரியுமா…??

செல்லப்பிராணி உயிரிழந்தால் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கும் விதமாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் சட்ட மசோதா கொலம்பியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொலம்பியா மக்களிடம் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 10 இல் 6 சதவீத குடும்பத்தினர் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். குழந்தை இல்லாதவர்கள் செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி அன்பு செலுத்துகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு செல்லப் பிராணிகள் இறந்தால் அனைத்து பணிகளிலும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் சட்ட மசோதா கொலம்பியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு சில அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் செல்ல பிராணியின் மரணம் அளிக்கும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியும் என்று கூறுகிறார்கள். செல்லப்பிராணி இறந்த துக்கத்தில் வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் இருப்பவர்களுக்கு இந்த விடுப்பு தீர்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தை பணியாளர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும், தங்கள் செல்லப்பிராணி உயிரிழந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இந்த சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |