தான் வளர்த்த செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுமி 9வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவரது மனைவி கிரண். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 9வது தளத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் உள்ளார். சம்பவ தினத்தன்று லலித் வேலைக்கு செல்ல, கிரண் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது ஜோத்னா சர்மா தனது செல்ல பிராணியான நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த நாய் பால்கனியில் இருந்த காபியில் மாட்டிக்கொண்டது. அதை காப்பாற்ற நினைத்த ஜோத்னா சர்மா 9வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நாயும் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லப் பிராணியான நாயை காப்பாற்ற முயன்று, 9வது மாடியில் இருந்து 12 வயது சிறுமி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.