செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று காட்டிய முக பாவனைகள், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி ஒருவர் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது திடீரென பூனை ஒன்றை வீட்டில் கொண்டு வந்து கொஞ்ச தொடங்கியதால், அந்த நாய் ஏமாற்றமடைந்தது.
இதனால் முதலில் அந்த நாய் பொறாமையுடன் அந்த பூனையை பார்த்துள்ளது. அதன் பின்னர், அந்த வீட்டின் உரிமையாளரின் கவனத்தையும் கவரும் வகையில், அவரை நெருங்கி வந்து உற்றுப் பார்க்கிறது. இருந்தாலும் வீட்டின் உரிமையாளர் அந்த நாயின் பக்கம் கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்காமல், பூனை தொடர்ந்து தடவிக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த அந்த நாய், ஏக்கத்துடன் பல்வேறு முக பாவனைகளுடன் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.