விற்பனை காக்கவும் பிற தேவைகளுக்காக பறவைகளை இனி கூண்டில் அடைத்து கூடாது என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் கூண்டுகளில் பறவைகளை அடைத்து வளர்க்கும் பழக்கம் நகர வாழ்வில் பரவலாக காணப்படுகின்றது. இதற்காக மக்கள் விரும்பும் பல்வேறு வகை பறவைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. செல்லப் பிராணிகளை விற்பனை நிலையங்களில் இனப்பெருக்கம் செய்தல், கூண்டில் அடைத்து விற்பனை செய்தல் மற்றும் பல பறவைகளின் கூண்டுகளில் அடைக்க படுவதற்கு எதிராக நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு விலங்குகள் நல வாரியம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இனி எந்த பறவையையும் கூண்டில் அடைத்து வைத்து விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளது. சுதந்திரமாக பறக்கும் உரிமை அனைத்து பறவைகளுக்கும் உண்டு எனவும் பறவைகளை கூண்டில் அடைத்து கூடாது எனவும் விலங்குகள் நல வாரியம் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.