Categories
தேசிய செய்திகள்

செல்லப்பிராணிகளுக்கு தடை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து சுங்கத்துறைக்கு அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முன்பு அவற்றிற்கு தொற்று உள்ளதா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

தேவையான சான்றுகள் எதுவும் இல்லாமல் விலங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையும் மீறி வெளி நாட்டிலிருந்து விலங்குகள் கொண்டுவரப்பட்டால் அந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா பரவலால் சிங்கம் உள்ளிட்ட பல வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்லப்பிராணிகள் மூலம் கொரோனா பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |