சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் யானை பாகனான தனேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் துணிக்கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு செல்போனில் சிறுமியை தொடர்பு கொண்ட வாலிபர் அவரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தனேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.