ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குலை மூப்பனூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யஸ்வந்த் மற்றும் திவின் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது இவரது மனைவி மற்றும் மகன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அர்ஜுன் மற்றொரு தென்னை ஓலை வீட்டில் தூங்கச் சென்றார். அப்போது தனது மொபைல் போனுக்கு சார்ஜர் போட்டுவிட்டு உறங்கினார். சில மணி நேரத்தில் திடீரென செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஓலை வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு திடீரென எழுந்து பார்த்த அர்ஜூன் வீடு தீப்பற்றிக் கொண்டதால் பதற்றம் அடைந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே அர்ஜுன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.