மின்னணு சாதனங்களிலிருந்து வெளிவரக்கூடிய கதிர்வீச்சுகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, நீதிமன்றம் இவ்விவகாரத்தில் எந்த அடிப்படையில் தலையிட்டு நிறுத்த முடியும் என நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமின்றி உங்களிடம் அலைபேசி உள்ளது. அதிலிருந்து கூடத்தான் கதிர்வீச்சுகள் வெளியாகிறது. அதற்காக நீதிமன்றத்தை நாடுவீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் கடும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். எனவே அதன் வாயிலாக பிரச்சனை பெரியதாகாமல் இருக்கும்.
இதற்கிடையில் செயற்கைக்கோள்கள் கூட கதிர் வீச்சுகளை வெளியிடுகிறது. இவையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என மனதாரர் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின் நீதிபதிகள் கூறியதாவது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறினர். அத்துடன் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய எதுவும் சாத்தியம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.