தமிழர் சுந்தர் பிச்சைக்கு அவருடைய மனைவியுடன் மலர்ந்த காதல் சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
கூகுள் நிறுவனத்தின் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழர் சுந்தர் பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் அவருடைய மனைவியான அஞ்சலி பிச்சையுடன் காதல் எப்படி மலர்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலத்தில் ஹர்யானி – மாதுரி சர்மா என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். அஞ்சலி ராஜஸ்தானில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கரக்பூரில் ஐஐடியில் பி.டெக் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளார். ஐஐடியில் படித்துக்கொண்டிருக்கும்போது சுந்தர் பிச்சையின் வகுப்பு தோழியாக அறிமுகமாகியுள்ளார். அஞ்சலியை பார்த்ததும் சுந்தர் பிச்சை காதலில் விழுந்ததால் இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் அஞ்சலியும் சுந்தர் பிச்சை மீது காதலில் விழ கடைசியில் வெளிப்படையாக தனது காதலை சுந்தர் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அஞ்சலி இந்தியாவில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொந்த காலில் நிற்க வேண்டும் என நினைத்து தொடர்ந்து உழைக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அஞ்சலி ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து பிசியாகி உள்ளார்.
செல்போன் அறிமுகமான காலத்தில் நடந்த காதல் இது. அதுவும் காதலன் அமெரிக்காவில், காதலி இந்தியாவில், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். அதன் பின் எப்போதாவது மூன்று மாதங்கள் ஒருமுறை மாதத்திற்கு ஒருமுறை பேசுவார்களாம். பொருளாதார ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டு பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய சுந்தர் இந்திய முறைப்படி திருமணம் செய்துள்ளார். பின்னர் திருமணம் முடிந்து அஞ்சலியையும் அவர் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது காவியா, கிரண் என்று அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.