நமக்கு பணம் தேவைப்படும் பொழுது நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை வைத்து பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த ஏடிஎம் கார்டு இல்லாவிட்டாலும் பணம் எடுக்க முடியும். இது நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஒரு சிலர் ஏடிஎம் மையத்திற்கு ஏடிஎம் கார்டு எடுக்காமல் சென்றிருப்பார்கள். இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.
இந்த நடைமுறை ஏற்கனவே ஏராளமான வங்கிகளிள் நடைமுறைகளில் இருந்தாலும் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியில் வாடிக்கையளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள யுபிஐ மொபைல் ஆப் மூலமாகவே ஏடிஎம்களில் பணத்தை எடுக்க முடியும். ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு இதற்கு தேவை கிடையாது. இது வாடிக்கையாளர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஆனால் இந்த சேவைக்கு வங்கிகள் தனியார் கட்டணம் வசூலிக்குமா என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுடைய எழுந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில், ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் இந்த சேவைக்கு வங்கிகள் தனியாக கட்டணம் வசூலிக்காது. வழக்கமாக ஏடிஎம்மில் பணம் எடுக்க வங்கிகள் வசூலிக்கும் அதே கட்டணம் தான் இதற்கு வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.