சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்னும் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர் கதறி அழுத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசிய போது தனது புகைப்படத்தை மார்பிங் செய்து whatsapp தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புகின்றனர். கடந்த செப்டம்பர் 11 எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக தெரிவித்து ஒரு மெசேஜ் வந்தது.
அதனுடன் வந்த ஒரு லிங்கை தொட்டவுடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதில் இருந்து என் மொபைல் ஹேக் ஆனது அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து மர்ம நபர்கள் எனக்கு போன் செய்து நீங்கள் ஐந்தாயிரம் வாங்கி இருக்கின்றீர்கள். அதை திரும்ப செலுத்துங்கள் என கூறி மெசேஜ் வந்து கொண்டே இருந்தது தொடர்ந்து மோசமாக பேசி புகைப்படங்களை மார்பிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இந்த நிலையில் என்னுடைய வாட்ஸ்அப் நண்பர்களுக்கு என் அப்பா அம்மாவுக்கு அனுப்புகின்றார்கள் என கதறி அழுதபடி தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி சைபர் பிரிவில் புகார் கொடுத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இனிமே யாரும் இதுபோன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கண்ணீருடன் பேசி இருக்கிறார்.