Categories
தேசிய செய்திகள்

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால்…. சிறுவன் செய்த விபரீதம்….!!!!

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியானது. சிறுவன் செல்போனுக்கு  அடிமையாகி இருந்ததும் செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி தந்தையை வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.

அவரது தந்தை கூலி தொழில் செய்து வருவதால் பணப் பிரச்சினை காரணமாக சிறுவனின் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை. இது குறித்து அவரிடம் எடுத்துக் கூறியும், அதை கேட்காத சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |