Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி அபிஷேக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் நின்று ஆண்டனி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஆண்டனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜெட்லி ஆண்ட்ரூஸ் மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |