செல்போனில் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய மாணவர்கள் நிறைய பேர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கின்றனர். எப்போதும் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டு தங்களை மறந்து, அதில் அதிக ஆர்வம் காட்டுவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.. பெற்றோர்கள் இதனை கண்டித்தால் விபரீத முடிவை எடுக்கின்றனர்..
அந்த வகையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மதுரை விளாங்குடியில் ப்ளஸ் 2 மாணவர் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.. இதனை தாய் முத்துமாரி கண்டித்து வந்ததால் மனமுடைந்த மகன் பிரான்சிஸ் எபினேசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.