மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி செல்போன் மூலமாக படித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கலையரசன் ஒருநாள் மாணவியிடம் உன்னை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலையரசன் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை வருமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அங்கு சென்ற மாணவியிடம் வாலிபர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோன்று தொடர்ந்து பலமுறை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கலையரசன் ஒருநாள் மாணவியின் வீட்டிற்கு யாரும் இல்லாத நேரம் பார்த்து வந்துள்ளார். அங்கு வைத்து மாணவியை பாலியல் கொடுமை செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து திருடன் என நினைத்து அடித்துள்ளனர். அதன்பின் கலையரசன் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து கலையரசனை மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.