மேற்கு வங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுமி தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் 9000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோனை சிறுமி ஒருவர் ஆர்டர் செய்துள்ளார் . அதற்கான பணத்தை திரட்டுவதற்காக ரத்த வங்கியில் தனது ரத்தத்தை விற்க முயற்சி செய்து உள்ளார். தன்னுடைய ரத்தத்தை செலுத்தினால் பணம் தருவீர்களா என அந்த சிறுமி கேட்ட நிலையில் சிறுமி விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செல்போன் வாங்குவதற்காக சிறுமி அடுத்த இந்த விபரீத முயற்சியை ரத்த வங்கியில் உள்ளவர்கள் காவல் துறையில் தெரிவித்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை விசாரித்தனர். பின்னர் செல்போன் வாங்குவதற்காக சிறுமி இத்தகைய முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.