செலவுக்கு பணம் இல்லாமல் ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம் மையத்திற்கு நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனையறிந்த எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த ஷேக்தாவூத் என்பவர் தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வேலையிழந்து செலவுக்கு காசு இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரந்தை உடைத்து திருட முன்றதாக ஷேக்தாவூத் கூறியுள்ளார்.