நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த வழக்கு அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது திமுக ஆட்சி தொடங்கியவுடன் ஏற்கனவே சீமான் மீது சற்று கடுப்பாக இருந்த திமுக தற்போது இந்த வழக்கை தூசிதட்டி மெல்ல மெல்ல விசாரணை செய்து ஹரி நாடார் கைது செய்து பெங்களூர் சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டது. தொடர்ந்து முக்கிய புள்ளியான சீமான் கைது செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு கட்சியின் தலைவர் என்று கூட பாராமல் ஸ்டாலினை பல மேடைகளில் வறுத்தெடுத்த சீமானுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஜாலியாக இருந்துவிடலாம் என்று நினைத்த சீமானுக்கு தற்போது திமுக எடுத்துவரும் ரிவெஞ்ச் சற்றே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
திமுகவை ஒரு மெஜாரிட்டியான கட்சி என்று கூட பாராமல் பல மேடைகளிலும் கலாய்த்து தள்ளிய சீமானை அந்த காலகட்டத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தது திமுக. ஆனால் அவர் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே தான் இருந்தது. தற்போது ஒரு சிறிய துப்பு நடிகை விஜயலட்சுமியின் மூலம் கிடைத்ததும் சீமானை எவ்வாறு வருத்தெடுக்கலாம் என முடிவு செய்து களமிறங்கியுள்ளது திமுக. இதற்காக நடமாடும் நகைக்கடை ஹரிநாடார் கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்து வைத்துள்ளது. தொடர்ந்து சீமான் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.